• Dec 07 2024

BTS வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்..! வைரலாகியுள்ள ஹேஷ்டேக்..வீடியோ இதோ

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் பிரபல நடிகை நயன்தாராவினை நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பின் காதலித்து திருமணம் செய்துகொண்டார் தற்பொழுது இருவரும் வாடகை தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்று வளர்த்து வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் சமீபத்தில் சிறுவர் தினத்திற்கு வாழ்த்து கூறி தமது குழந்தைகளுடன் போஸ்ட் ஒன்றினை பகிர்ந்திருந்தனர்.


இந்நிலையில் இப்போது விக்னேஷ் சிவன் அவர்கள் தனது ரசிகர்களை கவரும் விதமாக 'நானும் ரவுடிதான்' படத்தின் BTS காட்சி வீடியோவை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.செல்போனில் எடுக்கப்பட்ட 3 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், படத்தின்போது காட்சி எடுக்கப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களை காண முடிகிறது. இதை பகிர்ந்துகொண்டு, அவர் " Spread Love Sir" என ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் இதனை வரவேற்று, படம் தொடர்பான இனிமையான நினைவுகளை மீண்டும் பகிர்ந்து வருகிறார்கள். 'நானும் ரவுடிதான்' படம் தனித்துவமான கதையுடன், ரசிகர்களின் மனதில் முக்கிய இடம் பிடித்தது என்பதற்கும் இது ஒரு சான்று.

Advertisement

Advertisement