• May 19 2024

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் முன்னிட்டு வெளியானது "ஸ்டார்" திரைப்படத்தின் முதல் பாடல்... வைரலாகும் வீடியோ இதோ...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் இளன் பியார் பிரேம காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஆனார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் தான் "ஸ்டார்".


ஸ்டார்  திரைப்படத்தில் கதாநாயகனாக நரிகள் கவின் நடித்திருக்கிறார். ஸ்டார் படத்தின் முதல் பாடலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று வெளியிட போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன் வெளியாகி இருந்த போட்டோ ஆல்பம் வீடியோவும் வாய்ஸ் ஓவரில் படங்களுடன் அழகாக வீடியோவாக்கப்பட்டுள்ளது.


இயக்குனர் இளன், நடிகர் கவின் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஸ்டார்'. அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


இந்த படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா இசையில் 'காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்' என்கிற முதல் பாடலை இன்று டிசம்பர் 12ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர். கல்லூரி பின்னணியில் கவின் மற்றும் அவர் நண்பர்கள் இடையேயான ஜாலி பாடலாக வெளியாகி உள்ளது. இதை யுவன் சங்கர் ராஜா பாடி உள்ளார்.

இதோ அந்த பாடல்...


Advertisement

Advertisement