• Jan 19 2025

காதலித்து நீண்ட வருடங்கள் பிறகு கரம் பிடித்த ஜோடி... இணையத்தில் வைரலாகும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா திருமணபுகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை சமீபத்தில் திருமணம் செய்திருந்தார். சங்கீதா திருமகள் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

 

தமிழ் சினிமாவில் நெல்சன் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இப்படத்தில் இவருடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.


அதன் பின்னர் இவருக்கு A1 மற்றும் டாக்டர் திரைப்படங்கள் இன்னும் அதிக அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து பீஸ்ட், ஜெயிலர், DD Returns போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். 


ரெடின் கிங்ஸ்லி ஆரம்பகாலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோதே இருவரும் காதலிச்ச நிலையில், அவர்கள் பல ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் திருமணத்தின் பின்னர் இவர்கள் போட்டோ சூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement