• Dec 18 2024

புதிய சீரியலில் என்றி கொடுக்கும் ஆல்யா மானசா... அவரே வெளியிட்ட அப்டேட் இதோ...

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நாயகியாக நடிக்க தொடங்கி தற்போது அடுத்து அடுத்து சீரியல்கள் மூலம் சிறப்பான சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தனது அடுத்த சீரியல் குறித்து பதிவிட்டுள்ளார்.


ஆல்யா மானசா எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பவர். இந்நிலையில் தற்போது தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் அடுத்த சீரியல் தொடர்பான அப்டேட் போட்டுள்ளார். அதாவது ஆல்யா மானசாவின் ரசிகர் அடுத்த சீரியல் அப்டேட் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு ஆல்யா மானசா அடுத்த சீரியல் விரைவில் அறிவிக்கப்படும் எந்த சேனல் என்று கண்டு பிடியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


இதனால் ரசிகர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். ராஜா ராணி 2, இனியா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்த ஆல்யா மானசா குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, விளம்பரம் நடிப்பது, தனியார் நிகழ்ச்சி செல்வது என தற்போது பிஸியாக இருந்தது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement