• Feb 22 2025

இளையராஜாவின் இசை உரிமை மீறப்பட்டதா? வெளியான தகவல் இதோ..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் இசைஞானியாக திகழும் இளையராஜா, தனது பாடல்களின் மூலம் பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளார். இவர் இது வரைக்கும் 1000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியதுடன் பல விருதுகளும் வாங்கியுள்ளார். இளையராஜாவின் பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் கேட்கப்பட்டே வருகின்றது.

அந்தவகையில் தற்போது இளையராஜா பற்றிய தகவல் ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. அதில் இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஏனெனில் தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்கள், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை கோரியுள்ளது.


இந்த வழக்கில் மியூசிக் மாஸ்டர் நிறுவனம் முக்கியமான தரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம், இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது இசைப்பாடல்களை யூடியூப் மற்றும் பிற ஒளிபரப்புத் தளங்களில் வெளியிட்டுள்ளது என்று புகார் கூறப்பட்டுள்ளது.

இளையராஜா தனது இசைப் பணிகளை ஒரு தனிப்பட்ட சொத்து எனக் கருதி, அவற்றை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என பல முறை வலியுறுத்தி கூறியுள்ளார். இதற்காக அவர் ஏற்கனவே பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அந்தவகையில் இந்த வழக்கு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









Advertisement

Advertisement