• Mar 01 2025

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் புதிய திரைப்படங்கள்..! முழு விவரம் இதோ..

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

புதிய திரைப்படங்கள் திரையரங்கில் மட்டுமின்றி OTT தளங்களிலும் ரசிகர்களால் வெகு ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த வாரம் சில சிறந்த படங்கள் OTT தளங்களில் வெளியாக உள்ளன அவற்றை உங்கள் வசதிக்கேற்றபடி பார்க்க முடியும். கீழே அந்த படங்களின் விவரங்கள்..


மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் சிறிய பட்ஜெட்டில் பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக இருக்கின்றது. அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய இப்படத்தில் ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்பத் வாழ்க்கையின் உந்துதல், கலக்கமான காமெடி, மற்றும் உணர்வுகளைக் கையாளும் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ரசித்துள்ளனர். இப் படம் ஜீ 5  தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.


லாஸ்லியா மற்றும் ஹரி பாஸ்கர் நடித்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்  அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவானது. கடந்த 24-ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். துவக்கம் மட்டுமின்றி இந்த படத்திற்கு ஒரு தனி திருப்பமும் உள்ளது. இப் படம் டென்ட்கொட்டா  OTT தளத்தில் 25 - ம் தேதி  வெளியாகியுள்ளது.


புதுமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் போகுமிடம் வெகுதூரமில்லை. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் வெளியாக உள்ளது.   


மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சியில் அஜீத் குமார் அஜர்பைஜானில் கடத்தல்காரர்களிடமிருந்து தனது மனைவி கயலை (த்ரிஷா) மீட்பதற்காக அவர் படும் துன்பங்கள் படக்கதையாக உள்ளது 6 ஆம் தேதி வெளியாகியிருந்த இப் படம் மார்ச் 3 Netflix தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement