சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய தினம் தனது 74 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். ரசிகர்களும் மிகப்பெரிய ஆரவாரத்துடன் அவருக்காக போஸ்டர்கள், பரிசுகள், பூஜைகள் என்பவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனும் நடிகருமான தனுஷ் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தற்போது தனது எக்ஸ் மாமனாருக்கு தனுஷ் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து வைரலாகி வருகின்றது.
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனாலும் இந்த தம்பதியினர் சமீபத்தில் சட்டபூர்வமாகவே விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
d_i_a
இவ்வாறான நிலையிலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை மறக்காமல் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் தனுஷ்.
அதன்படி அவர் வெளியிட்ட பதிவில், ஹேப்பி பர்த்டே டு ஒன், ஒன்லி ஓன், சூப்பர் ஸ்டார்.. மாஸ் மற்றும் ஸ்டைல் என்றாலே அது நீங்கதான்.. எனது தலைவா... ரஜினி சார்.. என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனுஷ் ரஜினிக்கு மருமகனாக இருந்த காலத்திலும் பொது வெளியில் பேசும் போது சூப்பர் ஸ்டாரை தலைவர் என்று தான் பேசுவார். அத்துடன் வீட்டில் இருக்கும்போது கூட ஒரு முறை என்றாலும் மாமா என்று சொல்லாமல் சார் என்று தான் அழைப்பதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!