• Apr 15 2026

டாஸ்மாக்கில் மது வாங்க வரிசையில் நின்ற ரசிகர்கள்... அடித்து விரட்டிய நடிகர் விஷால்

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் பற்றி அவ்வப்போது எதாவது வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதே போல தற்போது மது வாங்க நிற்பவர்களை விரட்டி அடிப்பது போல வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.   


அவர் அமெரிக்காவில் ஒரு பெண் உடன் சுற்றிய வீடியோ வைரல் ஆன நிலையில் அது பிராங்க் என அவர் பின்னர் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் விஷால் டாஸ்மாக்கில் மது வாங்க வரிசையில் நிற்பவர்களை அடித்து விரட்டுவது போல ஒரு வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.


அது நிஜமான வீடியோ இல்லை, ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்னம் படத்தின் ஷூட்டிங் வீடியோ தான் அது என ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement