• Jan 18 2025

திருமணத்தின் பின் கணவரால் அவதிப்படும் வரலட்சுமி..!வைரலாகியுள்ள வீடியோ..இதோ

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன் பின்னர் இரவின் நிழல்,விக்ரம் வேதா, சர்க்கார்,  உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

வரலட்சுமி, பல வருடங்களாக காதலித்து வந்த மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும், இவ்விருவரும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருவது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


சமீபத்தில், வரலட்சுமி தனது கணவருடன் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். வீடியோவில், பயிற்சியின் பின்னர் கால்வலியால் அவதிப்பட்டு, உக்காரக்கூட முடியாமல் இருந்தது காணப்பட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள், வரலட்சுமி அவரது கணவரிடம் “மாட்டிக்கொண்டார்” என கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிகழ்வு, ரசிகர்கள் மத்தியில் சிரிப்பு மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, வரலட்சுமியின் உற்சாகமான மனப்பாங்கையும் காட்டுகிறது. உடல் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி இந்த தம்பதியினர் ஈடுபடும் முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement