• Aug 03 2025

ஜனனியின் லேட்டஸ்ட் லுக்கால் வாயடைத்துப் போன ரசிகர்கள்... வெளியான போட்டோஸ் இதோ.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஜனனி. அவரது அமைதியான அணுகுமுறை மற்றும் உணர்வுபூர்வமான பங்கேற்பு என்பன பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, ஜனனி சினிமா உலகிலும் தனது பயணத்தை தொடங்கினார்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜனனிக்கு கிடைத்த முக்கிய வாய்ப்புகளில் ஒன்று, விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம். இந்தப் படத்தில், ஜனனி சிறியதாயினும் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் திரையுலகில் தனது ஆரம்பத்தை தொடங்கினார்.


தற்போது, ஜனனி தனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்துள்ள படம் தான் 'உசுரே'. இதில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் மற்றும் வாழ்க்கையின் உணர்வுபூர்வமான பிரிவுகளை சுட்டிக்காட்டும் இப்படம், ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிதமான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ஜனனியின் உணர்ச்சிபூர்வமான நடிப்புக்கு பாராட்டுகள் கிடைக்கின்றன.


'உசுரே' பட வெளியீட்டை தொடர்ந்து, ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், அவர் கருப்பு நிற சட்டையில் மிகவும் ஸ்டைலிஷாக தோன்றியுள்ளார். 

இந்த போட்டோஸில் ஜனனி அழகாக காணப்படுகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், "ஜனனி ரொம்பவே கியூட்டா இருக்கா..!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ..!

Advertisement

Advertisement