• Aug 25 2025

ஆதிக் மனசில நீங்காத இடத்தை அஜித் பிடிச்சிட்டாரு போல.! டுவிட்டர் பதிவால் குஷியில் ரசிகர்கள்

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிரூபித்து வந்தவர் தான் அஜித் குமார். "தல" என்று ரசிகர்கள் பாசமுடன் அழைக்கும் இந்த முன்னணி நடிகர், 1992ம் ஆண்டு திரைஉலகில் தனது பயணத்தைத் தொடங்கினார். இன்று, அவர் இந்த துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களிடையே பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், அஜித்துடன் பணியாற்றிய 'குட் பேட் அக்லி' திரைப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது 'X' தளப் பக்கத்தில் சிறப்பான பதிவை பகிர்ந்து, அஜித்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அஜித் திரையுலகில் 33 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, ஆதிக் தனது X தளத்தில்," 33 years of phenomenal journey. you are rare gem...with unmatched  hard work! such a pure hearted soul.. love you sir!" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன் அவர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும்  இணைத்திருந்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement