• May 02 2026

திரை உலக பிரபலங்களை கழற்றி விட்ட 'காந்தாரா' நடிகர் ரிஷப்ஷெட்டி.. நடந்தது என்ன?

shali / 1 month ago

Advertisement

Listen News!

ரிஷப்ஷெட்டி, ‘காந்தாரா’ மூலம் உலகளவில் கவனம் பெற்றவர், தனது இன்ஸ்டாகிராம் செயல்பாடுகளில் மேற்கொண்ட திடீர் மாற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக சுமார் 140 பேரை பின்தொடர்ந்து வந்த அவர், தற்போது அந்த பட்டியலை முற்றிலும் சுருக்கி, தனது மனைவி பிரகதி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஒரு அறக்கட்டளை ஆகிய மூன்றை மட்டுமே பின்தொடர்கிறார்.


இந்த மாற்றத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், திரையுலகில் பிரபலமான நபர்கள் மற்றும் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், குறிப்பாக ஹொம்பாலே பிலிம்ஸ் போன்றவை கூட அவரது பின்தொடர்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

இதனால் கன்னடத் திரையுலகில் பல்வேறு ஊகங்கள் மற்றும் விவாதங்கள் எழுந்துள்ளன. சிலர் இதை அவரது தனிப்பட்ட முடிவாக கருதினாலும், மற்றவர்கள் இதன் பின்னணியில் தொழில்துறை அல்லது தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம் என பேசுகின்றனர்.

சமூக வலைதளங்களில் இது தொடர்பான பதிவுகள் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் இதை ஒரு “strategic move” என கூறுவதோடு, அவரது அடுத்த கட்ட திட்டங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளிவராத நிலையில், இந்த UNFOLLOW விவகாரம் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகவே தொடர்கிறது.


Advertisement

Advertisement