• May 03 2026

காதலுக்கும் இன்சூரன்ஸா? – விக்னேஷ் சிவனின் அந்த வித்தியாசமான முயற்சி.. கவனித்தீர்களா?

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Love Insurance Company’ (எல்.ஐ.கே) திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள நிலையில், S. J.சூர்யா , கிருத்தி ஷெட்டி மற்றும் சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பலமுறை இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால், படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகரும் தயாரிப்பாளருமான டாணா ரகுபதி தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. டீசரில் காணப்படும் காட்சிகள், விக்னேஷ் சிவனின் வழக்கமான காதல், நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை வெளிப்படுத்துகின்றன.

படத்தின் தலைப்பே ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ள நிலையில், டீசர் வெளியாகியதன் மூலம் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement