• May 02 2026

இந்த கூட்டணி செட் ஆகாது.. என்றவர்களுக்குப் பதிலடி.! வெளியானது 'Once More' படத்தின் அப்டேட்

shali / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘Once More’ திரைப்படம் ரசிகர்களிடம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி மற்றும் படத்தின் கதைக்களம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது படக்குழு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.


அதன்படி, ‘Once More’ படத்தின் ‘The Other World’ எனும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

பாடலின் பெயரே ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், இந்த பாடல் படத்தின் கதையுடன் எப்படி இணைகிறது என்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


அர்ஜுன் தாஸ் தனது தனித்துவமான நடிப்பால் ஏற்கனவே பல படங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அதிதி சங்கரின் நடிப்பு மற்றும் இந்தப் படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Advertisement

Advertisement