தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்று, தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை உருவாக்கி வருகிறது.
தற்போது இந்த படத்தின் முன்பதிவு வசூல் தொடர்பான தகவல் வெளியாகி, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிடைத்துள்ள தகவலின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகளவில் முன்பதிவில் மட்டுமே இதுவரை ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகுவதற்கு முன்பே இந்த அளவிலான வசூல் சாதனை என்பது, விஜய்யின் மார்க்கெட் மற்றும் ரசிகர் வட்டத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

‘ஜனநாயகன்’ படத்தின் மிகப்பெரிய பலம், விஜய் – ஹெச். வினோத் கூட்டணி என்பதில் சந்தேகமே இல்லை. ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் ஹெச். வினோத் தனது தீவிரமான திரைக்கதை மற்றும் சமூக கருத்துகளால் கவனம் ஈர்த்தவர்.
இந்த நிலையில், விஜய் போன்ற மாஸ் ஹீரோவுடன் இணைந்து அவர் இயக்கியிருக்கும் ‘ஜனநாயகன்’, அரசியல் பின்னணி , அதிகாரம் ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Listen News!