• Feb 20 2026

நடிப்பிலும் அழகிலும் அசத்தல்… இணையத்தைக் கலக்கும் அதிதி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகைகளில் ஒருவர் அதிதி ஷங்கர். நடிகை மட்டுமல்லாமல், மருத்துவராகவும் திகழும் இவர், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் மூலம் இணையத்தை கலக்கி வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், “வாவ்” என கமெண்ட்ஸினைக் குவித்து வருகின்றனர்.

கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம், கிராமத்து எளிமையும், தன்னம்பிக்கையும் கலந்த ஒன்றாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம், அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

பிரபல இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான இவர் தனது நடிப்பாலும், வெளிப்படையான இயல்பாலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்.

‘விருமன்’ படத்திற்குப் பிறகு, பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். நடிப்பைத் தவிர, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராகவும் காணப்படுகின்றார். 

இந்நிலையில், சமீபத்தில் அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட், சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. வைரலான போட்டோஸ் இதோ.! 

Advertisement

Advertisement