• Mar 08 2026

வீட்டுக்குள் புகுந்து அத்துமீறல்.. ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ இயக்குநர் மீது குற்றச்சாட்டு

shali / 6 days ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் சமீபத்தில் கவனம் பெற்ற ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் சிதம்பரம்.எஸ். பொதுவால் மீது கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, புகார் அளித்த பெண் 2022 ஆம் ஆண்டு ஏலம்குளம் பகுதியில் உள்ள தனது குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், அனுமதி இன்றி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்துகொண்டதாக இயக்குநர் சிதம்பரம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலம் 2022 என்றாலும், தற்போது தான் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் சிதம்பரம் இதுவரை எந்த அதிகாரபூர்வ பதிலும் அளிக்கவில்லை. சமூக வலைத்தளங்களிலும் அவர் தரப்பில் விளக்கம் வெளியாகவில்லை. அவரது பதிலை எதிர்பார்த்து திரையுலக வட்டாரமும் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement