பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தனது தம்பி சித்தார்த்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.கல்யாணத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் அருமையாக பார்த்து பார்த்து செய்து வரும் இவரது வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.
நேற்றைய தினம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தனது தம்பியின் மனைவியின் உடையினை சரி செய்து வைத்துள்ள காணொளி ஒன்றும் ரசிகர்களால் சேர் செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் தற்போது இவர் தம்பி கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளது.
தனது தம்பியின் அழகிய திருமண புகைப்படங்கள் விடியோக்களினை நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த பதிவில் "வாழ்நாள் முழுவதும் அன்பு, சிரிப்பு, சூரிய ஒளி மற்றும் மகிழ்ச்சி " என புகைப்படங்களினை பகிர்ந்துள்ளார்.
Listen News!