• Feb 21 2025

ஜாக்குலின் பிறந்த நாளிற்கு surprise கொடுத்த goa gang..! என்ன தெரியுமா..?

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

இந்த சீசன் பிக்போஸில் போட்டியாளர்கள் பெரிய நட்பினை சம்பாதித்துள்ளனர். வெளியிலும் மிகவும் அழகாக தொடரும் இந்த நட்பு ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றது. டைட்டில் வின்னர் மாத்திரமின்றி அனைவரும் இந்த சீசனில் மீடியாக்களில் பிரபலம் ஆகி வருகின்றனர்.


அனைத்து போட்டியாளர்களும் மக்கள் மனதை வென்றுள்ளார்கள் என்றே சொல்லலாம் மற்றும் வீட்டிற்குள் goa gang ,sofa gang ,பிரியாணி gang என பல டீம் உலாவித்திருந்தது. வெளியிலும் அவர்கள் நிகழ்வுகளிற்கு gang ஆக செல்வது என இன்றுவரை அதை பேணி வருகின்றனர்.


இந்த நிலையில் பிக்போஸின் சிங்கப்பெண் ஜாக்குலின் இன்று பிறந்தநாளினை கொண்டாடுகின்றார்.இவருக்கு surprise கொடுப்பதற்காக சவுந்தர்யா ,ராயன் இருவரும் கையில் கேக்குடன் வந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தை வைரலாகியுள்ளது.


இவர்களை கண்டதும் ஜாக்குலின் துள்ளி குதித்து சத்தம் போட்டுள்ளதுடன் "கடவுளே இந்த goa gang என் வாழ்க்கை முழுவதும் இருக்கணும் இந்த டாச்சர் நான் அனுபவிச்சிட்டே இருக்கணும்பா " என கடவுளை வேண்டி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். வீடியோ இதோ ..

Advertisement

Advertisement