• Oct 26 2025

வடிவேலு பாலாஜியோ.. ரோபோ சங்கரோ.. யார் போனாலும் நிகழ்ச்சி நடக்கும்.! நாஞ்சில் விஜயன் பகீர்!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகில், காமெடியில் தனிச்சிறப்பு பெற்றவர்கள் என்று சொன்னால் வடிவேலு பாலாஜி, ரோபோ சங்கர், மற்றும் புகழ் உள்ளிட்ட கலைஞர்கள் முதல் வரிசையில் வருவார்கள். இவர்களது நகைச்சுவை பாணியும், நேர்த்தியும், நேரடி பார்வையாளர்களை கவரும் திறமையும், அவர்களை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இதயமாகவே மாற்றி வைத்தது.


ஆனால், இந்த சூழலில், நாஞ்சில் விஜயன் அளித்த சமீபத்திய கருத்து தொலைக்காட்சி உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் போது நாஞ்சில் விஜயன், “வடிவேலு பாலாஜியா இருக்கட்டும், ரோபோ சங்கரா இருக்கட்டும்.... யார் போனாலும் தொலைக்காட்சிக்கு எந்த இழப்பும் இல்லை. ஏன்னா அது ஒரு கார்ப்பரெட் கம்பெனி. அவங்களுக்கு அந்த கலைஞர்கள் இல்லன்னாலும், அந்த ஷோ நடக்கும். அவர்களின் இழப்பு, அவர்களுக்கே. அந்த இடத்துக்குப் பிறகு வேறு ஒருவர் வருவார். நிகழ்ச்சிக்கு என்ன பாதிப்பு? எதுவும் இல்ல.” என்று கூறியிருந்தார். நாஞ்சில் விஜயனின் இந்தக் கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement