• Aug 21 2025

New project look-ஆ.? புதிய makeover-ல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராஷ்மிகா.! க்ளிக்ஸ் இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா ரசிகர்களிடம் தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் ராஷ்மிகா. தனது இயற்கையான அழகு, சிரிப்பு மற்றும் charming acting மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தற்போது தனது புதிய லுக்குடன் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


சமீபத்தில் ராஷ்மிகா தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் முடிக்கு கலர் அடித்து, புதிய கெட்டப்பில், முற்றிலும் புதிதான தோற்றத்தில் காணப்படுகின்றார்.

சாதாரண ராஷ்மிகா ஸ்டைலை விட மிகவும் Bold, Experimental என்றே இதனைக் கூறலாம். அவரை ஒரு தடவை பார்த்தவுடன் இது ராஷ்மிகா தானா.? என சிலருக்கு தெரியாத அளவிற்கு வித்தியாசமான லுக்காக அமைந்துள்ளது.


இந்த போட்டோ வெளியான சில நிமிடங்களில் ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனுடன் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். சிலர் இது ஒரு புதிய படத்துக்கான கெட்டப்பா? இல்ல போட்டோஷூட்டா? என்ற கேள்விகளையும் பதிவிட்டனர். 

Advertisement

Advertisement