• Jul 09 2025

முன்னாள் காதலருடன் நடிப்பது ரொம்ப வலி..! ராபர்ட்டுடன் நடித்ததை உருக்கமாக பகிர்ந்த வனிதா!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எப்போதும் நேராகவும், தைரியமாகவும் பேசுவதை ஒரு அடையாளமாக வைத்திருப்பவர் வனிதா விஜயகுமார். சர்ச்சைகளில் சிக்காமல் நேர்மையாக தனது அனுபவங்களை பகிரும் தன்மை கொண்டவளாகவே ரசிகர்கள் அவரை காண்கிறார்கள்.


அந்த வகையில், சமீபத்தில் இடம்பெற்ற ஒரு உருக்கமான YouTube நேர்காணலில், வனிதா தனது முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டருடன் மீண்டும் Mrs & Mr திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் பகிர்ந்த இந்த உணர்ச்சி நிறைந்த விளக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா தனது பேட்டியில் கூறியது மிகவும் உணர்ச்சியுடன் இருந்தது. அவர் அதன்போது, “தமிழ் சினிமாவில் பிரிந்த பிறகு மீண்டும் படத்தில் இணைந்து நடித்த ஜோடிகள் என்றால், சிம்பு-நயன்தாராவிற்கு அப்புறம் நானும் ராபர்ட்டும் தான்!” என்று கூறியிருந்தார்.


இந்த உரை ரசிகர்கள் மனதை நெகிழச்செய்தது. ஏனெனில் வனிதா-ராபர்ட் உறவு கடந்த காலத்தில் மிக பிரபலமானது. அதன் பிறகு பிரிவு ஏற்பட்டது. ஆனால் அவர்கள் மீண்டும் Mrs & Mr படத்துக்காக இணைந்திருந்தது, பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

வனிதா தொடர்ந்து, “அந்த படத்தில் தாலி கட்டுற சீன் மட்டும் நாங்க 40 தடவை எடுத்தோம். இது just a scene தான், ஆனால் அதைப் பார்ப்பது ரொம்பவே வலி..." எனக் கூறியிருந்தார். இந்த கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement