• Jan 19 2025

அந்த ஹீரோ நைட் வாரியான்னு கேட்டான்..! காசுக்காக தான் அப்படியொரு App வச்சிருக்கன்! நடிகை கிரண் ஓபன் டாக்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் பங்கு பற்றியவர்கள் தான் நடிகை கிரண் மற்றும் சகிலா. ஆனால் கிரண் ஒரு வாரத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினார்.

கோவாவில் செட்டிலான கிரண், அடிக்கடி மோசமான உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது ஷகிலாவுடன் இடம் பெற்ற பேட்டி ஒன்றில் பல்வேறு விசயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை கிரண். அதன்படி அவர் கூறுகையில்,


நான் பணத்துக்காக தான் எல்லாமே பண்றேன். பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களும் ஆப் வைத்து தான் ரசிகர்களுடன் பேசி வருகிறார்கள். இதில் எந்த ஒரு தவறும் இல்லையே.

எனக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் யாரும் உதவி செய்யவில்லை. ஒரு பிரபல நடிகர் நைட் போன் ரூம்க்கு வாரியா என்று கேட்டார் என வெளிப்படையாகவே கூறியிருந்தார் கிரண்.

பிகினி உடைகளை அணிந்து போஸ் கொடுத்தால் நான் என்ன தப்பானவளா? எனக்கு முழு உரிமையும் இருக்கு. அதை வைத்து தப்புத்தப்பாக பேசவும் எழுதவும் இவர்கள் எல்லாரும் யாரு என விளாசி உள்ளார்.

Advertisement

Advertisement