• Jan 18 2025

500 கோடி ரூபாய் பட்ஜெட் படம்.. சொதப்பிடாதீங்க.. த்ரிஷாவுக்கு அட்வைஸ் செய்தாரா மணிரத்னம்?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை  த்ரிஷா குறித்து அதிமுக முன்னாள் பிரமுகர் ஏவி ராஜூ என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம், உங்களை நம்பி 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்து கொண்டிருக்கிறேன், உங்கள் பிரச்சனையால் இந்த படத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று த்ரிஷாவுக்குதக்லைப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குனர் மணிரத்னம் அட்வைஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் போகிற போக்கில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்பட பிரபல நடிகர்கள் இதற்கு எந்த கண்டனமும் தெரிவிக்காத நிலையில் நடிகர் சங்கம், பெப்சி மற்றும் ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே கண்டனம் தெரிவித்தனர்.



இந்த நிலையில் த்ரிஷாவை தனியாக அழைத்த மணிரத்னம் நீங்கள் நடித்து கொண்டிருக்கும்தக்லைப்படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி கொண்டிருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் தற்போது ஒரு சர்ச்சையில் மாட்டி உள்ளீர்கள், இதை இப்போதைக்கு பெரிது படுத்த வேண்டாம், உங்கள் சர்ச்சையால் படத்திற்கு ஏதும் பிரச்சினை வந்து விடக்கூடாது, ஏனெனில் இந்த படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்துக் கொண்டிருக்கின்றோம், எனவே படம் முடிந்து ரிலீஸ் ஆகும் வரை அடக்கி வாசியுங்கள்என்று த்ரிஷாவுக்கு மணிரத்னம் அட்வைஸ் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதோடு த்ரிஷா நிறுத்தி கொள்வார் என்றும் இதற்கு மேல் எந்த நடவடிக்கையும் அவர் இப்போதைக்கு எடுக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement