• May 20 2024

தொகுப்பாளர் தீபக்கின் மகனை பார்த்துள்ளீர்களா..அட அடுத்த ஹீரோ ரெடி போல...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சித் தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் பிரபலநடிகரும், தொகுப்பாளருமான தீபக்கும் ஒருவர்.

இவர் 1999 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜென்மம் எக்ஸ் என்ற திகில் தொடரில் நடித்திருந்தார். அதன்பின்னர் சன் டிவி ஜெயா, டிவி ராஜ் டிவி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார். மேலும் இவர் நடித்த பல்வேறு தொடர்கள் பெரும் வெற்றியையும் கண்டது. ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் என்று தான் கூற வேண்டும்.

அண்ணி, கீதாஞ்சலி, மனைவி, செல்வி, பந்தம், அரசி, திருமதி செல்வம், ரோஜா கூட்டம் என்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் தீபக் அதேபோல தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.மேலும் தொலைக்காட்சி நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் தீபக் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் தீபக் தொகுப்பாளராக பணியாற்றி வந்தா.ர் அத்தோடு பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், சூப்பர் குடும்பம், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் தீபக். நடிப்பில் அசத்தியது போன்று தனது தொகுப்பாளர் பணியிலும் அசத்திய தீபக் தனது ஆங்கரிங் திறமை மூலமும் ரசிகர்களை கவர்ந்தார்.

இதுமட்டுமல்லாது நடிகர் தீபக் பல்வேறு படங்களில் நடித்திருப்பதோடு மாத்திரமல்லாது தண்ணில கண்டம் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் களமிறங்கினார்.அத்தோடு தற்போது தமிழும் சரஸ்வதியும் எனும் சீரியலில் கதாநாயகனாக பட்டையை கிளப்பி வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் நடிகர் தீபக் கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இவருக்கு அக்னித் என்ற ஒரு மகனும் பிறந்தான்.தற்போது என்ன வென்றால் தனது மகன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தீபக்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட இவரா உங்களது மகன் என்றும் அடுத்த ஹீரோ இவர் தான் என பல்வேறு கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றார்கள்.

இதோ அந்த புகைப்படம்…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement