• May 20 2024

விஜய்தேவர்கொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜய்தேவர்கொண்டா. இவர் தற்பொழுது நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

அத்தோடு இப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம்போன்ற மொழிகளில் இந்தத் திரைப்படம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் இவர்களுடன் இன்னும் பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளது. காலா, கபாலி, மெட்ராஸ் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள முரளி இந்த படத்திற்கும் ஒளி பதிவு செய்கிறார்.

புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குடும்ப பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாகி வருகிறது. காஷ்மீரில் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப் படக்குழு சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement