• Apr 26 2024

முக்கிய இடத்தில் மாபெரும் சாதனை படைத்த அஜித்தின் துணிவு..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் துணிவு. நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சி முடிந்த பின் துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித் - எச். வினோத் கூட்டணியில் வெளிவந்த இப்படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் மாபெரும் அளவில் வரவேற்பை பெரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இவ்வாறுஇருக்கையில் , வட அமெரிக்காவில் துணிவு திரைப்படம் ப்ரீமியர் 207 இடங்களில் செய்யப்பட்டுள்ளது.மேலும் இதில் மட்டுமே $229,051 வரை வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது துணிவு.

எனினும் அதுமட்டுமின்றி இப்படம் தான் வட அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்து அஜித் திரைப்படம் என்ற புதிய மையில் கல்லையும் எட்டியுள்ளது.

விரைவில் $250K வரை துணிவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement