• Jan 19 2025

என்னுடைய டார்லிங், லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- குஷ்பு போட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் என போற்றப்படும் கமல்ஹாசன் சிறு வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் அல்லாது இந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. யாரும் எதிர்பார்த்திரா விதமாக அத்திரைப்படம் அசாதாரண வசூலை கைப்பற்றியது. உலக அளவில் பாக்ஸ் ஆஃபீஸை திணறடித்தது.


சுமார் ரூ. 400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. கமல்ஹாசனின் திரைப்படப் பயணத்திலேயே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்தது.இதனை அடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.


இது ஒருபுறம் இருக்க கமல்ஹாசன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குஷ்பு கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்


Advertisement

Advertisement