நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்ச்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தல ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விடாமுயற்ச்சி ட்ரெய்லர் ரிலீசாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைப்பது உறுதியாந நிலையில் படம் தொடர்பாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது தற்போது குட் பேட் அக்லி இசையமைத்து வருகின்றேன். அதனை நான் வெளிப்படையாக கூறமுடியாது. தயாரிப்பு நிறுவனம் அறிவித்த பிறகு தான் பேசமுடியும்.
அஜித்தின் படங்களின் பின்னணி இசையிலேயே, இப்படத்திற்காக உருவாகி இருக்கும் பின்னணி இசையாக மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்களின் ரசிகர்கள் அனைவரும் தங்களின் ரிங்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் அனைவரும் குஷியில் இருக்கிறார்கள்.
Listen News!