விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 60 நாட்களைக் கடந்து உள்ளது. ஆனாலும் இந்த சீசன் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் சுவாரஸ்யம் அற்றதாகவே காணப்படுகிறது. வழமையாகவே பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மற்றும் அதில் வைக்கப்படும் டாஸ்கள், சண்டை சச்சரவுகள் என அனைத்தும் ரசிகர்களை எண்டர்டைமண்ட் பண்ணும் வகையில் காணப்படும்.
எனினும் இந்த சீசன் அதற்கு எதிர் மாறாக அமைந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு முதலாவது வாரமே சூடுபிடிக்க தொடங்கும். ஆனால் இந்த சீசன் கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களைக் கடந்து வைக்கப்பட்ட டெவில்ஸ் ஏஞ்சல்ஸ் டாஸ்க் மூலம் தான் சூடு பிடித்தது.
இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
d_i_a
இதை தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இவர்களுள் முதலாவதாக ரவீந்தரர், அர்ணவ, தர்ஷா குப்தா, சுனிதா, ரியா தியாகராஜன், வர்ஷினி, சிவகுமார் மற்றும் இவர்களுடன் இறுதியாக சாச்சனா, ஆனந்தி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக வெளியேறிய தயாரிப்பாளரும் பிக் பாஸ் விமர்சகருமான ரவீந்தரர் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
அதன்படி அவர் பிக் பாஸ் சீசனின் எட்டாவது டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வருவார் என்றும் அவரைத் தொடர்ந்து ரன்னராக தீபக் வருவார் என்றும் அவரை தொடர்ந்து சௌந்தர்யா, ராஜன், மஞ்சரி ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!