• May 20 2024

ஆதிரை கல்யாணம் கரிகாலனுடனா..? குணசேகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு... அடுத்து நடக்கப் போவது என்ன..? வெளியானது 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் விசாலாட்சி ஆதிரைக்காக சாருபாலாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருந்தார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் விசாலாட்சி "என் பிள்ளை வாழ்க்கையைக் காப்பாத்தணும் எண்டு தான் இங்க வந்தேன்" எனக் கூறுகின்றார். அதற்கு குணசேகரன் "உன் மகள் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டிற்றேன் அம்மா" எனக் கூறுகின்றார். இதைக் கேட்டதும் ஆதிரை "நீ நினைக்கிறது நடக்காது" என குணசேகரனைப் பார்த்துக் கூறுகின்றார். 


மறுபுறம் கரிகாலன் "மணமகள் ஆதிரைச் செல்வி மணமகன் கரிகாலன்" எனக் கூறி சந்தோசப்படுகின்றார். அதற்கு ரேணுகா "ஆதிரைக்குத் தான் பிடிக்கலயே" எனக் குணசேகரனிடம் கூறுகின்றார். குணசேகரன் "ஆதிரைக்குப் பிடிக்கல என்று யார் சொன்ன" எனக் கேட்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.


ஆதிரை கல்யாணம் யாருடன் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement

Advertisement