தற்போது வெளியான வைபவின் 'ரணம்' தொடர்பிலான விமர்சனம் பற்றி பார்ப்போம்.
அடையாளம் தெரியாத உடல் ஒன்றை வைத்து அவர் யார்? என்பதை வரைபடமாக வரையும் திறமைப்படைத்த நாயகன் தான் வைபவ்.
காவல்துறையால் முடிக்க முடியாத சில வழக்குகளுக்கு குற்றப் பின்னணி கதை எழுதிக் கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார். இதற்கிடையே சென்னையில் வெவ்வேறு பகுதியில் கிடைக்கும் அட்டைப் பெட்டிகளில் இருந்து உடல் பாகங்கள் கிடைக்கிறது. இதில் இறந்தவர் யார்? எப்படி கண்டு பிடிப்பது என்று தெரியாமல் திணறும் காவல்துறைக்கு வைபவ் உதவி செய்கிறார்.
திடிரென்று வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைபவ் இந்த வழக்கிற்குள் வர வேண்டாம் என்று சொல்ல, மறுகணமே அவர் மாயமாகி விடுகிறார்.
இதை அடுத்து புதிதாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப், வழக்கு விசாரணை கையில் எடுக்க அவருக்கும் வைபவ் பல உதவிகளை செய்வதோடு, இந்த மர்ம பின்னணியையும் நடக்கும் உயிரிழப்புகள் பற்றியும் கண்டுபிடித்து விடுகிறார்.
அவர் எப்படி கண்டுபிடித்தார்? அந்த மர்ம நபர் யார்? எதற்காக இவ்வாறு செய்கிறார்கள்? வைபவ்புக்கும் இந்த கேஸ்க்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பாக சொல்வது தான் 'ரணம்'.
இந்த திரைப்படத்தில் நாயனாக நடித்திருக்கும் வைபவ் இதுவரை நடத்திடாத வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் தனக்கேற்ற வேடத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.
விபத்தில் மனைவியை இழந்து, விரைப்பில் வாழும் அவர், குழப்பம் நிறைந்த உயிரிழப்புகளின் வழக்கு பற்றிய பின்னணியை கண்டுபிடிக்கும் விதம் மற்றும் அதில் அவர் வெளிப்படுத்தி அப்பாவித்தனமான நடிப்பு என்பன அட்டகாசமாக உள்ளது.
ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடிய வைபவ் , ஆக்சன் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அழுத்தமாக நடித்து தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தன்யாகவும் தனது நடிப்பு மூலம் கவனத்தை ஈர்க்க முயற்சித்தாலும், குற்றப்பிரிவினை கண்டுபிடிப்பதை விட அது குறித்து வைபவ் இடம் உதவி கேற்பதையே வேலையாக வைத்துள்ளார்.
கதையின் மையப் புள்ளியான நந்திதா ஸ்வேதா, இளம் விதவையாக 10 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருப்பது ஆச்சரியம் என்றாலும் அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
வைபவ்பின் காதலியாக நடித்திருக்கும் சரத் மேனன், குறைவான காட்சிகளில் வந்திருந்தாலும் நிறைவாக நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, இரவு நேர காட்சிகளை அளவான ஒளியியல் இயற்கையாக படம் ஆக்கி, காட்சிகளோடு ரசிகர்களை பயணிக்க வைப்பதோடு காதல் பாடலை கலர்ஃபுல்லாக படமாக்கி ரசிக்க வைத்துள்ளார்.
ஆக மொத்தத்தில் இசை, கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் என அனைத்திற்கும் ஏற்ற வகையில் இந்த படம் பயணித்திருக்கிறது.
Listen News!