புதுமுக நடிகர்கள் நடித்துள்ள பைரி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ஜான் கிளாடி இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், மினிமம் பட்ஜெட்டில் உருவான பைரி படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதன்படி அவர் கூறுகையில்,
நாகர்கோவில் கதைக்களத்தில் புறா பந்தயத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது இந்த படம். இந்த படத்தின் கதையே வித்தியாசமாக உள்ளது.
நாகர்கோவில் பகுதியில் புறா பந்தயம் என்பது பல ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதில் ஹீரோ புறா பந்தயத்தில் கலந்து கொள்ள கூடாது என அவரது அம்மா கட்டுப்பாடு விதிக்கிறார். அதற்கு காரணம், புறா பந்தயத்தால் ஹீரோயின் அப்பா, தாத்தா தொழிலில் கவனம் செலுத்தாமல் குடும்பம் மோசமான நிலைக்குச் சென்றது தான்.
இதனால் மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என நினைக்கிறார் ஹீரோவின் அம்மா.
ஆனால் படிக்க வேண்டும் என்றால் புறா பந்தயத்தில் பங்கேற்க அனுமதி வேண்டும் என அம்மாவிடம் கோரிக்கை வைக்கும் ஹீரோ, கடைசியில் தனது அம்மாவின் லட்சியத்தையும் தனது லட்சியத்தையும் நனவாக்கினாரா என்பது தான் கதையின் கருவாக உள்ளது.
இந்த படத்தின் பிளஸ் என்னவென்றால், அது புறா பந்தையக் கதையாக மட்டுமில்லாமல் புறா வளர்ப்பவர்களின் வாழ்க்கை முறையையும் அப்படியே எடுத்துக் காட்டியுள்ளது.
அதில் புறாக்களுக்கு பயிற்சி எப்படி கொடுக்குறாங்க, அதற்காக வரும் பிரச்சனை, போட்டி, புறாவை எப்படி தயார் படுத்துறாங்க என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து காட்சிப்படுத்தி உள்ளார்கள்.
இந்தப் படம் முழுவதும் கதை நடக்கும் களத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது போல் காட்டப்படுகிறது. புறா பந்தயம் எப்படி நடக்கும் என்பதை விஷுவலாக ஷூட் செய்து வியக்க வைத்துள்ளார் இயக்குனர்.
ஆனால் பைரி படத்தின் இரண்டாம் பாதி, அந்த படத்திற்கு கிடைத்த மைனஸ் .இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளதால் முதல் பாகம் கிளைமேக்ஸ் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கவில்லை.
ஆனால் ஜீனியர் ஆர்டிஸ்ட்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளார் என பைரி படத்தை பாராட்டி விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Listen News!