• May 21 2024

நடிகர் சூர்யா நடிக்கவுள்ள பிரம்மாண்ட திரைப்படம்-யாருடைய இயக்கத்தில் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சூர்யா.

பல ஹிட் படங்களை கொடுத்த இவர் திரையுலகில் அசைக்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம்வருகின்றார்.எங்கு சென்றாலும் இவரின் திரைப்படங்கள் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.

அதன்படி விக்ரம் திரைப்படத்தில் அவரின் ரொலக்ஸ் கதாபாத்திரம் செம வைரலானது, இதனால் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தின் மீது இப்போது ரசிகர்கள் ஆர்வம் அதிகமாகியுள்ளது என்றே கூற வேண்டும்.

அத்தோடு அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸும் வந்தபடி உள்ளன, அந்த வகையில் சூர்யா 41 திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக்காகி வரும் சூரரை போற்று திரைப்படத்திலும் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது சூர்யா இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தான் இணையத்தில் பரவி வருகின்றது. ஆம், சிவா மற்றும் சூர்யாவின் திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே தற்போது அந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும், அவர்கள் இணையும் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெடில் உருவாகும் என தகவல் தீயாய் பரவி வருகின்றது.

பெரிய பொருட்செலவில் உருவாகும் அப்படத்தில் முக்கிய இசையமைப்பாளர் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement