• May 11 2024

“கமோன் பேபி ..” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இயக்குநர் பாரதி ராஜா-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நாயகிகளை வயல்காட்டில் ஓடவிட்டு கிராமியத்தை தத்துரூபமாக படம்பிடித்துக் காட்டியவர் தான் பாரதிராஜா. சின்னசாமியாக பிறந்து சுகாதாரத் துறை அதிகாரியாக பணியாற்றிய பாரதிராஜா சினிமாவில் இருந்த ஈர்ப்பால் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல்படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே தமிழ் சினிமா அதுவரை பின்பற்றிய எல்லா இலக்கணங்களையும் உடைத்து வெற்றிகண்டார்.

மேலும் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு புது புது அனுபவத்தை கொடுத்தார்.இவரின் வாழ்விலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைவாழ்க்கையிலும் மிக முக்கியமான திரைப்படம் முதல் மரியாதை. சிவாஜிகணேசனை அதுநாள் வரை யாரும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடுத்தர வயதை கடந்துவிட்ட ஒரு ஆணுக்கு வரும் காதலை படமாக்கி பலரின் மனங்களையும் தொட்டார்.

அத்தோடு வயது வந்தோர் மட்டுமே கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க முடியுமென்ற காலகட்டத்தில் கார்த்திக், ராதா ஆகியோரை மிக இளம் வயதிலேயே பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து பாரதிராஜா இயக்கியிருந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காதல் காவியங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டதோடு இன்று வரை பேசுபொருளாக அமைந்துள்ளது. மதங்களை கடந்து காதலை பேசியிருந்த இந்தத் திரைப்படம் பாரதிராஜாவிற்கு இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பெரிய அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

இவ்வாறு இருக்கையில் லிங்குசாமி இயக்கிய “கமோன் பேபி ..”பாடல் பட்டி தொட்டு எங்கும் ஹிட் அடித்து அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.இதில் கீர்த்திஷெட்டி மற்றும் ராம் ஆடி இருந்தனர்.இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாட்டை வைத்து ரீல் செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமியுடன் இணைந்து பாரதி ராஜாவும் “கமோன் பேபி ..” பாடலுக்கு ஒரு டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர்.இதனை லிங்குசாமி தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே அதிக லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றது.

இதோ அந்த வீடியோ….

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement