• May 11 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய மூர்த்தி..?இது தான் காரணமா.. ஷாக்கான ரசிகர்கள்….!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்.

இந்த சீரியலின் மூர்த்தி கேரக்டரில் நடிக்கும் ஸ்டாலின் ஏற்கனவே சீரியல் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான். இவர் தொடர்ந்து பல வருடங்களாக சின்ன திரையில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய கேரக்டர் ரசிகர்களின் மனதில் எளிதில் பதிந்துவிடும் வகையில்தான் இருந்து வருகிறது. அதனாலேயே இவருக்கு குடும்ப ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலமாகவும் தற்போது இவருக்கு தங்கள் வீட்டில் ஒருவர் என்று நினைக்கும் அளவிற்கு அனைவருக்கும் பரிச்சயம் ஆக மாறி இருக்கிறார். இந்த சீரியலில் வீட்டின் மூத்த அண்ணனாக இருந்து அனைவருக்கும் அப்பா ஸ்தானத்தில் இவர் செய்யும் செயல்கள் மற்றும் பாசத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவருடைய உண்மையாகவே குணம் இது தான் என்று நினைத்து தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக போகும் பச்சைக்கிளி எனும் சகோதர உறவைக் கொண்டு எடுக்கப்படும் தொடரில் கதாநாயகிக்கு அண்ணனாக களமிறங்கி உள்ளார் மூர்த்தி .இந்த தொடர் ஜீலை 4 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

இவ்வாறு இருக்கையில் இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவு பெற போகுதா…இல்லாவிடில் விஜய் டிவியை விட்டு மூர்த்தி வெளியேறிவிட்டாரா என பல கேள்வகளை கேட்டு வருகின்றார்கள்.

ஆனால் மூர்த்தி விலகி விட்டாரா என்ற தகவல் வெளியாகவில்லை என்றும் அவர் புதிய சீரியலில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement