• Jan 27 2026

ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே துரத்திய கோபி.. இந்த செருப்படி தேவையா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

குறித்த ப்ரோமோவில், ராதிகா டிஸ்டார்ஜ் ஆகி வீட்டுக்கு வரும்போது அங்கு ஈஸ்வரி இருப்பதை பார்த்த கமலா, நீ இன்னும் வீட்டை விட்டு போகவில்லையா? உனக்கு வெட்கம் இல்லையா? என கண்டபடி திட்டுகிறார்.

ஆனாலும் ஈஸ்வரி நான் ஒன்றுமே செய்யவில்லை என்று அழுது புலம்ப, ராதிகாவும் நீங்கதான் என் குழந்தையை கொன்னுட்டீங்க, உங்களுக்கு மனசாட்சியே இல்லையா அப்படி என்று அவரும் சரமாரியாக திட்டுகிறார்.


இதைத்தொடர்ந்து ஈஸ்வரி கோபியிடம் சென்று தன் மீது தப்பு இல்லை என்று பேசவும், அவரும் நீங்க ஆசைப்பட்ட மாதிரியே குழந்தைய இல்லாம ஆக்கிட்டீங்களே என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், வீட்டை விட்டு வெளியே போகுமாறு ஷாக் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி, எதையும் செய்ய முடியாமல் தனது பேட்டியை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவர் வீதியில் நின்று அழுது கொண்டிருக்க, அங்கு பாக்கியா வருகிறார். பேட்டியுடன் ஈஸ்வரி ரோட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement