• Jul 18 2025

மலையாள இயக்குநருடன் இணையும் சூரி..! ரசிகர்களுக்கு கிடைத்த குட்நியூஸ்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா தற்போது தனித்துவமான படைப்புகள், புதிய முயற்சிகள் என அனைத்து விதமான பரிணாமங்களிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒரு பரிணாமம் என்றால், மற்ற மொழி இயக்குநர்களுடன் இணையும் கூட்டணி. இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் செய்தி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


அந்தவகையில் தற்பொழுது நடிகர் சூரி, லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் நடிக்கும் புதிய படத்தினை  மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


காமெடி நடிகராக தமிழில் சிறப்பான இடத்தைப் பிடித்தவர் சூரி. இதையடுத்து தற்போது பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துவருகின்றார். தற்பொழுது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கவிருப்பது, அவரது கரியரில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என சிலர் எதிர்பார்க்கின்றனர்.

படம் குறித்து இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரவில்லை என்றாலும், இந்த கூட்டணி உருவாகும் செய்தி மட்டுமே தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement