• Aug 08 2025

3 BHK பட விழாவில் ரவிமோகனின் மனத்தை உருக்கும் பேச்சு....! வைரலாகும் வீடியோ...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்  சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக  வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்று விட்டார்  என்று தான் கூற முடியும்  இந்த நிலையில் ரவி மோகன் 3 BHK பட விழாவில் கலந்து கொண்டு பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது. 


இயக்குநர்"ஸ்ரீ கணேஷ்" இயக்கத்தில் புதிய  படத்தைப் பார்த்த பிறகு தனது உணர்வுகளை மிக எளிமையாகவும், ஆழமாகவும் இருப்பதாக கூறியிருந்தார். இந்த படம் ஒரு உணர்வுப் பயணம். "எனக்கு இந்த படத்துக்கான விமர்சனம் சொல்லும் தகுதி இல்லை. இன்னும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று  நினைக்கிறேன்".என்று உணர்வுபூர்வமாக கூறினர் ரவிமோகன்


இந்த படத்தை இயக்குநர் பாலு மகேந்திராவின் "வீடு" திரைப்படத்துடன் ஒப்பிட்டு பாராட்டினார். “வீடு எவ்வளவு நமக்குள் சென்று நம்மை தொட்டதோ, இந்த படமும் அதே அளவுக்கு நம்மை நெகிழச் செய்யும்,” என்றார். மேலும் “இந்த படம் வெளிவந்த பிறகு மக்கள் இது பற்றி பேசுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த படத்தில் 17 வயதிலிருந்து 45 வயது வரை ஒரு மனிதனின் வாழ்க்கையை நெகிழ்ச்சி நிறைந்த விதமாக எடுத்துள்ளார். ரவி மோகன்  இதனை நோட்டீசாக கூறினார் “அந்த ஒரு சின்ன சாஞ்சும், அதே சாஞ்சு 25 வயசுல வராது. அந்த ஷாட் ரெஃபரென்ஸா பாருங்க என்று கூறினார் . 


மேலும் கூறிய ரவி மோகன் இந்த படம் ஒரு பெரும் உந்துதலாக  இருந்ததாக கூறினார். “நான் ஒருபோதும் ரெண்டட் ஹவுஸ்ல இருந்ததில்லை. ஆனால் தற்போது அங்கு தான் இருப்பதாகவும் கூறியதுடன். இந்த படம் எனக்குள் அந்த அனுபவத்தை உணர வைத்தது. இது என் வாழ்க்கையை மறுபடியும் வாழ்த்த மாதிரி இருந்தது” என்றார். இவர் கூறிய விடயம் ரசிகர்கள் பல கருத்துக்களை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு  வருகின்றனர் . 





Advertisement

Advertisement