• Mar 29 2025

குட் நியூஸ் சொன்ன இயக்குநர் லோகேஷ்! நடிகர் அஜித்துடன் அடுத்த படம் உறுதி!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்ரெட்னிங் இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்துவரும் இவர் சமீபத்தில் அஜித்குமாருடன் அடுத்த திரைப்படம் என அப்டேட் கொடுத்துள்ளார். இந்த செய்தி தீயாய் பரவி வருகிறது. 

இயக்குநர் லோகேஷ் சினிமாவிற்கு அறிமுகமானதன் பின்னர் தளபதி விஜய், கமல்ஹாசன், கார்த்தி உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களை வைத்து படம் கொடுத்து ஹிட் இயக்குநர் வரிசையில் சேர்ந்தார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்வொன்றில் இயக்குநர் லோகேஷ் கலந்து கொண்டார். அப்போது "பெரிய நடிகர்களை வைத்து படங்கள் எடுத்துட்டிங்க அஜித் சார் வைத்து எப்போ படம் எடுக்க போறீங்க?" என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். " எல்லா இயக்குநருக்கும் அஜித் சார் கூட வேலை செய்யணும் என்று ஆசை இருக்கும் எனக்கும் இருக்கு இப்போ சார் 2 படம் பண்ணிட்டு இருக்காரு அது முடியட்டும் கூடிய சீக்கிரம் படம் பண்ணுவோம்னு நினைக்கிறேன்" என்று தல ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளார். இந்த விடையம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement