• Jan 19 2025

இப்படி காப்பி பண்ணி ப்ரோக்ராம் பண்ணனுமா? மாகாபா மானத்தை வாங்கிய ‘சிறகடிக்க ஆசை’ மீனா..

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களும் பிரபலமாகி விட்டார்கள் என்பதும் குறிப்பாக மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா, முத்து கேரக்டரில் நடிக்கும்  வெற்றிச்செல்வன் ஆகியவர்கள்  தமிழக முழுவதும் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவியில் இன்று புதிதாக தொடங்கும் ’அது இது எது’ என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்து வரும் வெற்றிச்செல்வன், கோமதி பிரியா மற்றும் அனிலா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில்  தொகுப்பாளர் மாகாபா இந்த நிகழ்ச்சியை பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டபோது கோமதி பிரியா ’சிவகார்த்திகேயன் சார் நடத்தும் போது தெரியும் என்று கூறினார். ’அதற்கு பிறகு நான் நடத்தியது தெரியாதா’ என்று மாகாபா கூற ’நீங்கள் தான் இப்போதும் நடத்துகிறீர்களே உங்களை எதற்கு கூற வேண்டும் என்று கலாய்த்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து கோமதி பிரியா கூறியது தான் ஹைலைட். ’ஏற்கனவே இந்த நிகழ்ச்சி உள்ள  குரூப்ல டூப் என்ற என்ற ரவுண்டை ஊ சொல்றியா நிகழ்ச்சியிலும் பயன்படுத்திவிட்டு தற்போது இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பயன்படுத்துகிறீர்கள், ஏன் இப்படி காப்பி அடித்து புரோகிராம் செய்கிறீர்கள்’ என்று கேட்க மாகாபா அதிர்ச்சி அடைந்தார். அப்போது ’உண்மை ஒருநாள் தெரியும்’ என்ற பாடல் பின்னணியில் ஒலித்தது.

இந்த நிலையில் அனிலாவிடம் இந்த நிகழ்ச்சியை பற்றி தெரியுமா என்று மாகாபா கேட்டபோது ’இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை என்று கூறியது மாகாபா மீண்டும்  அதிருப்தி அடைந்து போல் தெரிந்தது.

ஆனால் வெற்றிச்செல்வன் தான் மாகாபாவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ’இந்த நிகழ்ச்சி தான் எனக்கு ஆரம்பம், இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் எத்தனையோ பேர் சின்னத்திரையிலும்,  பெரிய திரையிலும்,  வந்திருக்கிறார்கள், அந்த வகையில் எனக்கும் இந்த நிகழ்ச்சி  ஒரு ஊக்கம் தந்த நிகழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement