• Jan 19 2025

அவங்க மட்டும் வரல என்றால் கீதாஞ்சலி பைத்தியம் ஆகியிருப்பான்- செல்வராகவன் குறித்த உண்மையை உடைத்த அவரது அப்பா

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் செல்வராகவன்.இதனை அடுத்து இவர் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் இவருக்கு மெகா ப்ளாக் பஸ்டர்  வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இன்றுவரை அந்தப் படம் பலரால் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் உலகம், மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெவ்வேறு ஜானரில் வெளியாகி  ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தற்பொழுது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.அதன்படி பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 


நடிப்பு மட்டுமின்றி ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களையும் அவர் இயக்கவிருக்கிறார். கடைசியாக தனுஷ் எழுதிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் குறித்து அண்மையில் அவரது அப்பா கஸ்தூரி ராஜா பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.


அதில் "செல்வராகவனை அப்படியே விட்டிருந்தால் பைத்தியம் ஆகிருப்பான். கீதாஞ்சலி வந்த பிறகுதான் அவன் மாறியிருக்கிறான். சின்ன வயதில் அவனை கோயிலுக்கு அழைத்து செல்லும்போது, ஏன் கடைல போர்டு இருக்கு; ஏன் லைட் சிகப்பா எரியும்; ஏன் சம்பாதிக்கணும்; வாழ்க்கைனா என்ன என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பான். அவன் ஒரு நல்ல க்ரியேட்டர். இன்னமும் அவர் அந்த ஸோனில்தான் இருக்கிறான்" என்றார்.


Advertisement

Advertisement