• Oct 13 2024

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக களமிறங்கும் கவின்! தீபாவளிக்கு ரெடியாகும் சம்பவம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் கவின். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலம் ஆனார். பிக் பாஸ் வீட்டில் கவினும் சாண்டி மாஸ்டரும் செய்த குறும்புகள் இன்றும் வீடியோக்கள் மூலம் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி முதன் முறையாக கவின் நடித்த படம் லிஃப்ட். இந்த படத்தில் சாஃப்ட்வேர் துறையில் பணி புரிபவர்கள் என்ன என்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பது ஹாரரையும் சேர்த்து ஒரு திரில்லர் படமாக வெளிவந்த லிஃப்ட் படம் ரசிகர்கள் கவர்ந்து ஹிட் அடித்தது.

அதன்பின் டாடா படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. கவின் கேரியரில் திருப்பு முனையாக காணப்பட்டது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். செண்டிமெண்ட் காட்சிகள் கொண்ட இப்படம் நல்ல வசூலை பெற்றது.

இறுதியாக கவின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஸ்டார். இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த படம் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும் ஓரளவு வரவேற்பை பெற்றது.


இதையடுத்து இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் பிளடி பெக்கர் என்கிற படத்திலும் நடித்துவிட்டார் கவின். இந்த படத்தை நெல்சனின் உதவியாளர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் கவின் நடித்த பிளடி பெக்கர் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், அவருக்கு போட்டியாக கவினின் பிளடி பெக்கர் படமும் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement