• Sep 17 2024

கூலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் பெயர் என்ன தெரியுமா? லோகி சம்பவம் ஸ்டார்ட்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் தான் கூலி. இந்தப் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தில் மிக அளவில் புகழ்பெற்ற நடிகர் சௌபின் ஷாஹிர் முதல் முறையாக ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவர் தயார் என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார்.

அதேபோல முதன்முறையாக தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா இணைந்துள்ளார். அவர் சைமன் என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார்.

மேலும் சுமார் 38 ஆண்டுகள் கழித்து கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ் இணைந்துள்ளார் . அதேபோல கன்னட திரை உலக பிரபல நடிகரான உபேந்திரா ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக கூலி படத்தில் நடிக்க உள்ளார். அவர் ரஜினிகாந்தின்  தீவிர ரசிகர்.


அதேபோல உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் கூலி படத்தில் பிரீத்தி என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார். கையில் மம்பட்டியுடன் அவர் இருக்கும் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எதிர வைத்திருந்தது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடிக்க உள்ள கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் கூலி படத்தில் 'தேவா' என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார். அவர் நடித்த தளபதி திரைப்படத்தில் மம்முட்டியின் பெயர் தேவா என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement