விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்றைய நாள் சுவாரஷ்யமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அது குறித்து பார்ப்போம்.
வெளியாகிய முதல் ப்ரோமோவில் அன்ஷிதா இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். "நான் வன்மத்தை கொட்டமாட்டேன். எனக்கு ரொம்ப ஒரு பெரிய ஹக் கொடுக்கணும் சௌந்தர்யா நீ உடையாத இந்த வீட்டுக்குள்ளையே ஒருத்தருக்கு PR வர்க் போய்க்கொண்டு தான் இருக்கு. முத்துகுமரா உனக்கு தான் என்று சொல்லி சவுந்தர்யாவை கட்டி பிடித்து ஹக் கொடுக்கிறார்.
பின்னர் முத்து ரவீந்தரிடம் "அண்ணா நாங்க இந்த வீட்டை விட்டு போறவரைக்கும் நான் தான் ஜெயிக்கணும் என்பதை சொல்லாதீங்க என்று சொல்கிறார். இந்நிலையில் தற்போது அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில் பணப்பெட்டி தொடர்பாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதனை முத்து வாசிக்கிறார் " பணப்பெட்டியை நீ எடுக்க போறியா ? பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பணப்பெட்டியை எடுக்கும் நபர் கேமை தொடரலாம் என்று அறிவிக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து பணபெட்டி இருக்கும் இடத்துக்கு சென்று நேரம் முடிவடையும் முன் அதை எடுத்து வரவேண்டும் அப்படி எடுப்பவருக்கு அந்த பணபெட்டி சொந்தம். அப்படி வரவில்லை என்றால் அத்துடன் உங்களுடைய பயணம் முடிவடையும். என்று புது டாஸ்கை கொடுக்கிறார். கடந்த 7 சீசன்களில் நடைபெறாத ஒன்று இந்த சீசனில் நடைபெறுகிறது. யார் பணத்தினை எடுப்பார் என்று பார்ப்போம்.
Listen News!