தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வந்த இளைய தளபதி விஜய், தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாமல்லாபுரத்தில் இன்று (டிசம்பர் 22) நடைபெற்ற சமத்துவ கிறிஸ்மஸ் விழா வியப்பூட்டும் விதமாக நடந்தது. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் நடத்துவதோடு, சமூக சேவையும் இணைத்து குழந்தைகளுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய், தனது வருகையால் குழந்தைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளார். விழாவின் போது, விஜய் குழந்தைகளுடன் இணைந்து பெரிய கேக் வெட்டிக் கொண்டாடினார். இது விழாவின் முக்கிய தருணமாக இருந்தது.

மேலும் விஜய், குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கினார். அக்குழந்தைகளுக்கு அதன்போது திருக்குறள் புத்தகம், டிக்சனரி, மற்றும் சாக்லேட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
Listen News!