• May 06 2024

படவாய்ப்பு இல்லாததால் நடிகை அதிதி ஷங்கர் எடுத்த திடீர் முடிவு- வாழ்த்துத் தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 5 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருந்தவர் தான் அதிதி ஷங்கர். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற வண்ணாரப்பேட்டையில என்னும் பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியிருந்தார்.


இப்படத்தைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் எதுவும் கிடைக்காததால், விளம்பரங்களில் நடித்து வந்தார். அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.


இவர் டாக்டருக்கு படித்திருக்கின்றார். இருப்பினும் சினிமா மீது இருந்த ஆசை காரணமாகவே நடிக்க வந்த இவர் தற்பொழுது டாக்டர் பணிக்கே திரும்பியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement