• Aug 24 2026

ராம் சரணோட நடித்த பிறகு ஜான்வி வாழ்க்கை இப்படி மாறிடுச்சே… ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை ஜான்வி கபூர் தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிலான சம்பளத்தை ‘பெத்தி’ திரைப்படத்திற்காக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்காக அவருக்கு ரூ.8 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜான்வி கபூர் உருவெடுத்துள்ளார்.


இதற்கு முன்பு தேவரா திரைப்படத்தில் நடித்ததற்காக ஜான்வி கபூர் சுமார் ரூ.5 கோடி சம்பளம் பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த சம்பளத்தை விட ரூ.3 கோடி அதிகமாக ‘பெத்தி’ படத்திற்காக பெற்றிருப்பது திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வரும் ஜான்வி, தனது மார்க்கெட்டையும் ரசிகர் பட்டாளத்தையும் வேகமாக உயர்த்தி வருகிறார்.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ள இந்த படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

குறிப்பாக ஜான்வி கபூரின் திரைநடிப்பு, நடனக் காட்சிகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் ஜான்வி கபூரின் மார்க்கெட் மேலும் வலுவடைந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement