• Jun 07 2026

திரையரங்குகளை அதிரவைக்க வரும் செல்வராகவன்.. 'மனிதன் தெய்வமாகலாம்' படத்தின் அப்டேட்

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உணர்வுகள், வாழ்க்கை தத்துவம் மற்றும் சமூகச் செய்திகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டாக “கலங்காதே ராசாவே..” என்ற மியூசிக் வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பாடல் படத்தின் உணர்ச்சி ரீதியான அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி வருகிறார். மேலும், குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம், கதைக்களம் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை, கதை மற்றும் காட்சிப்படுத்தல் அனைத்திலும் வித்தியாசமான அணுகுமுறையுடன் உருவாகி வரும் இந்த படம், வெளியீட்டிற்கு முன்பே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement