• Oct 04 2024

முட்டி ஆபரேஷன் செய்ததை மறந்து டிடி செய்த வேலை! வைரலாகும் வீடியோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக இருந்த டிடி இப்போது தொலைக்காட்சி பக்கமே வருவது இல்லை. கடந்த 10 வருடங்களாக முட்டி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த டிடி 3 சர்ஜரி செய்துள்ளார், அது அனைத்துமே உதவவில்லை.


தற்போது டிடிக்கு 4வது சர்ஜரி நடந்துள்ளது, மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்தேன். இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நம்பிக்கையுடன பிரார்த்தனை செய்கிறேன், முன்னேற்றம் ஏற்படும் என டிடி பதிவு செய்திருந்தார்.


நடக்க முடியாமல் 3, 4 சர்ஜரி செய்த டிடி தற்போதைய நிலை என்ன என்பது ரசிகர்களுக்கு அனைவருக்கும் தெரியும். அவர் நேற்று வேட்டையன் பட ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியுள்ளார்.


அப்போது மனசிலாயோ பாடலுக்கு கியூட் நடனம் ஆடியுள்ளார், நீண்ட வருடங்களுக்கு பிறகு டிடியை நடனம் ஆடி காண்பதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவரது லேட்டஸ்ட் வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. அவருக்கு கால் பிரச்சினை குணமாகி விட்டதா எனவும் நலம் விசாரித்து கேள்வி எழுப்பிவருகிறார்கள். 

Advertisement

Advertisement